பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகர் கார்த்தி இந்த திரைப்படத்தை அமீர் அவர்கள் இயக்கியிருந்தார். கார்த்தி தமிழ் திரை உலகில் அறிமுகமாகி 15 வருடங்களுக்குள் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்து விட்டார். இந்த நிலையில் கார்த்தி கடந்த வருடம் பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் என அடுத்தடுத்த ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து தற்பொழுது கார்த்தி நடிப்பில் பொன்னின் செல்வன் 2 திரைப்படமும் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. அதனால் வசூலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் எனவும் தெரிகிறது. நடிகர் கார்த்தி இயக்குனருடன் சண்டை போட்டு சந்தானத்துடன் நடிக்க முடியாது என கூறியது தற்பொழுது தெரியவந்துள்ளது.
கார்த்தி முதன்முதலாக போலீஸ் கெட்டப்பில் நடித்த திரைப்படம் தான் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான சிறுத்தை திரைப்படம். இந்த திரைப்படம் கார்த்திகாரியரில் முதல் ஆக்ஷன் திரைப்படமாக அமைந்தது அதேபோல் சந்தனத்தின் காமெடி சிறுத்தை திரைப்படத்தில் அதிகமாக பேசப்பட்டது இந்த நிலையில் கார்த்தி மற்றும் சந்தானத்தின் காட்சிகள் குறைவு என்பது அனைவருக்கும் தெரியும்.
2012 ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியாகிய சகுனி திரைப்படத்தில் காமெடி காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது. அதேபோல் கார்த்தி சந்தானம் நடிப்பில் வெளியாகிய அலெக்ஸ் பாண்டியன் என்ற திரைப்படத்திலும் காமெடி ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது இதனைத் தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.
எம் ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி சந்தானம் ஆகியொருடன் காஜல் அகர்வால், பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள் பொதுவாக எம். ராஜேஷின் திரைப்படம் என்றாலே ஹீரோவை விட காமெடியார்களுக்கு தான் பிளஸ் அப்படிதான் இந்த திரைப்படத்தில் கார்த்தியை சந்தனம் வச்சு செய்திருப்பார். ஒரு கட்டத்தில் சந்தானத்தின் நக்களும் காமெடியும் அதிகமானதால் கார்த்தி டென்ஷன் ஆகிவிட்டாராம்.
படப்பிடிப்பு தளத்திலேயே இயக்குனர் எம் ராஜேஷிடம் சென்று சண்டை போட்டு இனி சந்தானத்துடன் இணைந்து நடிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார். அவர் கூறியது போல் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்திற்கு பிறகு சந்தானத்துடன் கார்த்தி இணைந்து நடிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கவுண்டமணி பாணியை அப்படியே பின்பற்றும் சந்தானம் முன்னணி ஹீரோக்கள் என்று கூட பார்க்காமல் சகடமேனிக்கு கலாய்ப்பது வழக்கம்தான்.
அதனால்தான் சில முன்னணி நடிகர்கள் சந்தானத்தை தங்களுடைய திரைப்படத்தில் நடிக்க வைக்க தயக்கம் காட்டுகிறார்கள். இப்படி சந்தானத்திற்கும் கார்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் தான் இதுவரை இன்னும் சேர்ந்து நடிக்காமல் இருந்து வருகிறார்கள்.