சினிமாவில் உச்சத்தை தொட வேண்டுமென்றால் ஆரம்ப கட்டத்தில் பல சோதனைகளை தாண்டி தான் வரவேண்டும், அப்படி பல சோதனைகளைத் தாண்டி சினிமாவில் சரித்திரம் படைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் தல அஜித்.
நல்லவர்களுக்கு காலம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், அதேபோல் நல்லது செய்ய நினைப்பவர்களுக்கு கொஞ்சம் நல்லதும் பலவழிகள் கெட்டதும் நடக்கும், அப்படிதான் அஜித்தை சினிமாவிலிருந்து தூக்க வேண்டும் என பலரும் கூறினார்கள், ஒரு சிலருக்கு நல்லது செய்யப்போய் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டவர் அஜித்.
சினிமாவில் எப்பொழுதும் பெப்சி யூனியனுக்கும் இயக்குனர் சங்கத்திற்கும் அடிக்கடி ஏதாவது பிரச்சனை நடந்து கொண்டே இருக்கும், அப்படி ஒரு காலகட்டத்தில் பிரச்சனை வரும்பொழுது தல அஜித் இயக்குனர்களுக்கு சப்போர்ட் செய்யாமல் பெப்ஸி தொழிலாளிகளுக்கு சப்போர்ட் செய்துவிட்டார். தொழிலாளர்களுக்கு நல்லது செய்பவர் அஜித் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அந்தவகையில் பெப்ஸி யூனியனுக்கு சப்போர்ட்டாக இருந்தார் அஜித்.
அங்குதான் வெடிச்சது பிரச்சனை அதனால் இயக்குனர் சங்கம் இனி அஜித்தை வைத்து படம் செய்யக்கூடாது, எந்த தயாரிப்பாளரும் அவர் திரைப்படத்தை தயாரிக்க கூடாது என கூட்டம் கூடி முடிவு எடுத்தார்கள், இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் விக்ரமன் கூறியுள்ளார். அதன்பிறகு அஜித்திற்கு உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படத்தில் இரண்டாவது வாய்ப்பு நான் தான் கொடுத்தேன் என விக்ரமன் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் மேலும் அவர் கூறியதாவது அஜித் அவர்கள் இன்று சினிமாவிற்கு சோறு போடும் அளவிற்கு வளர்ந்து விடுவார் என்று அன்று அவர்களுக்கு தெரியாது எனக் கூறினார்.