Raja Rani serial actors Sanjeev surprise to Alya Manasa video: விஜய் தொலைகாட்சியில் வெளியான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ஆலியா மானசா அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்துள்ளார். இந்த சீரியலில் அதிக காதல் காட்சிகள் இடம்பெற்றதால் ரசிகர்களுக்கும்,காதல் ஜோடிகளுக்கும் பிடித்த சீரியலாக விளங்கியது.
சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இருவரும் காதலித்து வந்தனர். பின்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து சில மாதமே ஆன நிலையில் ரசிகர்களை டான்ஸ் ஆடி குதுகலப்படுத்தி வருக்கிறார்.
தற்பொழுது இன்ஸ்டாகிராமில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சஞ்சீவ் துப்பாக்கி சுடுதலில் பலூனை குறிவைத்து சரியாக சுட்டிருப்பார்.அதனைப் பார்த்த ஆலியா மானசா உனக்கு இவ்வளவு திறமை உள்ளதா என ஆச்சரியமாக சஞ்சுவை பார்த்து அவரை கட்டி அணைக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
#sanjeev #seriallove pic.twitter.com/Ic7FR9nt8R
— Tamil360Newz (@tamil360newz) April 27, 2020