விளம்பரத்தில் நடித்துள்ள ஆலியா மானசா.! வைரலாகும் வீடியோ.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  அந்தக் ஒன்று தான் ராஜா ராணி சீரியல்.  இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் அறிமுகமானார்கள்.

இவர்கள் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததால் இருவரும் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஐலா என்ற மகன் உள்ளார்.

ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததால் 2வது சீசன்வையும் ஒளிபரப்பி வருகிறார்கள். அந்தவகையில் ராஜா ராணி சீசன் 1  முடிந்தவுடன் சஞ்சீவ்  காற்றின்மொழி சீரியலில் நடித்து வந்தார்.

அதன் பிறகு ராஜா ராணி சீசன் 2 சீரியலில் ஆலியா மானசாவுக்கு ஜோடியாக சஞ்சீவ்வால் நடிக்க முடியாமல் போனது. எனவே சஞ்சீவ்க்கு பதிலாக கலர்ஸ் தமிழில் திருமணம் சீரியலில் நடித்து வந்த சித்து தற்பொழுது ஆலியா மானசாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தான் ராஜா ராணி சிசன் 2 ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய துவங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது ஆலியா மானசா புதிய விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.  அந்த விளம்பரத்தின் ஷூட்டிங் நடக்கும் பொழுது வீடியோவை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.