பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜாராணி சீசன் 1 மற்றும் சீசன் 2 தொடர் மூலம் பிரபலமானவர் ஆலியா மானசா. ராஜா ராணி சீசன் 1 இல் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்து வந்த சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் காதலித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வந்தனர்.
பின்பு ஆல்யாவிற்கு ஐலா என்ற மகன் பிறந்து உள்ளார். மேலும் ஆலியா தனது மகளை வைத்து யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் ஆல்யாவின் மகள் செய்யும் குறும்புகளை வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். பின்பு ஐலா பிறந்த சில மாதங்களுக்கு பிறகு இருவரும் சீரியலில் நடிக்க வந்து விட்டனர்.
அப்படி சஞ்சீவ் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஆலியா மானசா ராஜா ராணி 2 வில் நடித்து வந்தார் இந்தத் தொடரில் நடித்து வரும்போது ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையிலும் தொடர்ந்து சிறப்பாக நடித்து வந்தாலும் சமீபத்தில்தான் ஆல்யா இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.
அவருக்கு பதில் தற்போது ராஜா ராணி சீசன் 2வில் ரியா என்ற பிரபலம் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த மார்ச் 27ஆம் தேதி ஆலியா மானசாவிற்கு மகன் பிறந்துள்ளார். மேலும் இவர்களது மகனுக்கு அர்ஷ் என்ற பெயரும் வைத்து சோசியல் மீடியாவில் தெரியப்படுத்தி உள்ளனர்.
ஆலியா தனது மகனைப் பெற்ற பிறகு முதல் முறையாக அவரது மகனை பார்க்கும் எமோஷ்னல் வீடியோ ஒன்று தற்போது இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகின்றன. விடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.