விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் அனைத்தும் படத்தின் டைட்டிலை சீரியலின் டைட்டிலாக வைத்து ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள். அந்த வகையில் கடைக்குட்டிசிங்கம், ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கு இருவர் என சினிமா படங்களின் டைட்டிலை சீரியலுக்கு வைத்துள்ளார்கள்.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட சீரியல்தான் ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக வைரல் ஆனது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆலயமானசாவும் சஞ்சீவி நடித்திருந்தார்கள். இவர்கள் இருவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சில நாட்களிலேயே ஆலியா மானசா சஞ்சீவ் காதலில் விழுந்தார்கள் அதன்பிறகு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது பின்பு இவர்களின் திருமணம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடைபெற்றது அதற்கு காரணம் ஆலியா மானசா வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருமணம்தான் ரகசியமாக நடந்தாலும் திருமண வரவேற்பு மட்டும் பிரமாண்டமாக சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலில் நடித்து வருகிறார் அதேபோல் ஆலியா மானசா ராஜா ராணி இரண்டாவது பகத்திலும் நடித்து வருகிறார். இந்தநிலையில் இவர்களுக்கு அய்லா என்ற மகள் பிறந்தார். அச்சு அசல் ஆல்யா மானசாவை போல் உரித்து வைத்திருக்கும் அவரின் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. அதை பார்த்த ரசிகர்கள் குட்டி ஆலியா மானசா என வர்ணித்து வந்தார்கள்.
அந்தக் குட்டி ஆலியா மானசா அய்லாவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி னார்கள் இதில் கலந்து கொண்ட பல பிரபலங்களுக்கு ரிட்டர்ன் கிஃப்ட் கொடுத்தார்கள் அதற்கே பல லட்சங்கள் ஆகியிருக்கும் என தகவல் கிடைத்துள்ளது. மேலும் பிஎம்டபிள்யூ மினி கூப்பர் கார் வைத்திருக்கும் ஜோடி இவர்கள்தான். இந்த நிலையில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.