எப்படி திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொண்டோம் என்ற வீடியோவை வெளியிட்ட ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ்.! வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் ரசிகர்கள்.!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் காதல் காட்சிகள் அதிக அளவில் இருப்பதால் ரீல் ஜோடிகளாக நடித்து வரும் பலரும் ரியலாக  திருமணம் செய்து கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆலியா மானசா இவருக்கு ஜோடியாக நடிகர் சஞ்சீவ் நடித்து வந்தார். இந்த சீரியலில் இவர்களின் ஜோடி மிகவும் அருமையாக அமைந்ததால் இவர்கள் இருவரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்த.து அந்த வகையில் பலரும் இவர்கள் உண்மையிலும் காதலித்து வருகிறார்கள் என்று கூறப்பட்டிருந்த நிலையில் விஜய் டிவியே இவர்களுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்தது.  இப்படிப்பட்ட நிலையில் சில நாட்களிலேயே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களின் திருமணத்திற்கு ஆலியா மானசா பெற்றோர்கள் ஒப்புக் கொள்ள வில்லை எனவே ஆலியா மானசா தனது பெற்றோரின் சம்மதத்தையும் மீறி சஞ்சீவ்வை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவரின் அப்பா மட்டும் ஆலியா மானசாவிடம் பேசுவார். இப்படிப்பட்ட நிலையில் சில மாதங்கள் கழித்து ஆலியா மானசா கர்ப்பமாக இருந்ததால் விஜய் டிவியே இவர்களின் வளைகாப்பு விழாவையும் நடத்தி வைத்தது.

அவ்வபொழுது அவரின் அம்மாவும் ஆலியா மானசாவிடம்  பேச தொடங்கிவிட்டார். இந்நிலையில் இவர்களுக்கு தற்பொழுது ஒரு வயதாகும் ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் வீட்டிலேயே இருந்து வருவதால் சில மாதங்களாக சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து தங்களது வீட்டில் நடந்து வரும் பலவற்றையும் ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் இவர்கள் இருவரும் எப்படி திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொண்டார்கள் என்ற வீடியோவை தங்களது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.