சராசரி மனிதனின் பல வருட சம்பளத்தை ஒரு மாத வாடகையாக கொடுக்கும் ஆலியா பட்.! எத்தனை லட்சம் தெரியுமா.?

aliya butt
aliya butt

Aliya Butt: ரன்பீர் கபூர், ஆலியா பட் பூனேவில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடியேறி உள்ளனர் அந்த வீட்டின் மாத வாடகையை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். பாலிவுட் முன்னணி நடிகரான ரன்பீர் கபூரும் நடிகை அலியா பட்டும் பிரம்மாஸ்திரா படத்தில் இணைந்து நடித்த பொழுது காதலிக்க தொடங்கினார். பிறகு கடந்த 2018ஆம் ஆண்டு பெற்றோர்கள் சமதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்கள்.

இவ்வாறு திருமணத்திற்கு பிறகும் ஆலியா பட் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது அந்த குழந்தைக்கு ராஹா என்று பெயர் வைத்துள்ளனர். இவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத், ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் குறித்த சர்ச்சைக்குரிய தகவல் வைரலானது.

அதாவது இந்தி நட்சத்திர ஜோடிகள் பிரம்மாண்டமாக ஊரைக் கூட்டி திருமணம் செய்துக் கொண்டாலும் இருவரும் எப்போது வேறு வேறு மாடியில் தான் வசிக்கிறார்கள். ஆனால் வெளி உலகத்திற்கு சேர்ந்து இருப்பது போல் காட்டிக் கொள்கின்றனர் என கூறப்பட்டது. இந்த சூழலில் ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரும் பூனேவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆடம்பர சொகுசு வீடு ஒன்றில் வாடகைக்கு குடியேறி இருக்கிறார்கள்.

அந்த வீட்டின் மாத வாடகை ரூபாய் 4 லட்சமாம், இரண்டாவது வருடத்திற்கு ரூபாய் 4.2 லட்சம் என்றும் மூன்றாவது வருடத்திற்கு ரூபாய் 4.4 லட்சம் என்றும் வாடகை உயர்ந்து கொண்டே செல்கிறதாம். எனவே ரன்வீர் கபூர், ஆலியா பட் இருவரும் மும்பையில் பாந்திரா பாலிஹில் என்ற பகுதியில் ஏரியல் வியூ என்று அடுக்குமாடி கட்டிடத்தில் ரூபாய் 38 கோடிக்கு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்களாம். அது 2 ஆயிரம் 497 சதுர அடி உள்ள இந்த வீட்டை தனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் வாங்கியுள்ளனர். தற்பொழுது அந்த வீட்டிற்க்கான  கட்டமைப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இவர்கள் தங்களது புது வீட்டில் குடியேற இருப்பதாக கூறப்படுகிறது.