நடிகர் அஜித்தை வைத்து கிரீடம் என்ற திரைப்படத்தை கொடுத்து தமிழ் சினிமாவுலகில் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் ஏ எல் விஜய் முதல் படம் இவருக்கு பெரும் சரிவை சந்தித்தது. நன்கு சுதாரித்துக் கொண்டார் ஏ எல் விஜய் சிறப்பம்சம் உள்ள திரைப்படங்களை அடுத்தடுத்து கொடுத்து திரை உலகில் தனக்கான இடத்தை பிடித்தார்.
இவர் இயக்கத்தில் மதராசப்பட்டினம் தெய்வத்திருமகள், சைவம் போன்ற படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. மேலும் விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றது அதன்பிறகு ஏ எல் விஜயின் படம் என்றால் அதற்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் பின்பற்றத் தொடங்கியது. அந்த அளவிற்கு தனது திறமையை அடுத்த திரைப்படங்களில் வெளிக்காட்டியிருந்தார் இருப்பினும் சமீபகாலமாக இவர் படங்களை பெரிதாக அவர் ஆர்வம் காட்டவில்லை அதற்கு காரணம் இவரது குடும்ப பிரச்சனையை காரணம் எனவும் கூறப்படுகிறது.
தெய்வத்திருமகள் திரைப்படத்தின் போது அமலாபாலுக்கும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்து ஒரு கட்டத்தில் கல்யாணத்தில் முடிந்தது. சில காலங்கள் கழித்து இவர்களுக்கு இடையே இருந்த சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதன் பிறகு பெரிதும் அமலாபாலும் சரி ஏ எல் விஜய்யும் சரி மீடியா பக்கமே தென் படவில்லை ஆனால் ஒரு கட்டத்தில் அமலா பால் ஆடை அளவை குறைத்து தனது ரசிகர்களின் பட்டாளத்தை மீண்டும் அதிகரித்தார். ஏ எல் விஜய்யோ தனது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தீவிரம் காட்டினார் தற்போது அமலா பாலை விட அவர் ஒரு அழகான பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்துள்ளது.
தற்போது ஏ எல் விஜய் தனது மனைவி மற்றும் குழந்தையை மீடியா உலகிற்கு காட்டி உள்ளார் அதன் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.