விஷால் action திரைப்படத்தை தொடர்ந்து எனிமி மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்த திரைப்படங்களை அவர் அடுத்ததாக தனது 31ஆவது திரைப்படத்திலும் நடிக்க முடிவெடுத்துள்ளார்.
இந்த திரைப்படத்தை இளம் இயக்குனரான து.ப. சரவணன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் கயாதி நடிக்கிறார் இந்த படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கு வேண்டியதாக தான் இருந்தது ஆனால் கொரோனா தொற்று இந்த படத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
தற்பொழுது கொரோனா இரண்டாம் கட்ட அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துள்ளதால் சினிமா படப்பிடிப்பு எடுக்க தற்பொழுது தமிழகம் அனுமதி அளித்துள்ளது இருப்பினும் குறைந்தது 100 பேருக்கு மேல் இருக்க கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது ஆனால் இதற்கு முன்பாக ஆந்திரா போன்ற ஒரு சில மாநிலங்கள் இதற்கு முன்பே படப்பிடிப்பை எடுக்க அனுமதி கொடுத்ததால் விஷாலின் 31-வது திரைப்படம் தற்போது ஆந்திராவில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தில் விஷால் டிம்பிள் காயாதி ஆகியோர் இணைந்த நிலையில் தற்போது யோகிபாபு இணைந்துள்ளார் இவரைத் தொடர்ந்து பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த அகிலன் என்பவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக ரவீனா என்பவர் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகிலன் இந்த படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் பகிரா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இதனால் இந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்துக் இருப்பதாக கூறி உள்ளார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்துள்ள அகிலனுக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.