குறைந்த படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று இருப்பவர் ஜெயம் ரவி இவர் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி தான். ஏன் இவர் கடைசியாக நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கூட பிளாக்பஸ்டர்..
வெற்றி பெற்றதை.. தொடர்ந்து என். கல்யாண கிருஷ்ணன் என்பவரின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படம் அகிலன். இந்தப் படம் முழுக்க முழுக்க ஹார்பரில் நடக்கும் பித்தலாட்டங்களை அப்படியே தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளது படத்தில் ஜெயம் ரவி உடன் இணைந்து பிரியா பவானி சங்கர், ஹரி உத்தமன், பாக்சர் தீனா, இளங்கோ குமரவேல், தன்யா ரவிச்சந்திரன், மது சூதனன் ராவ், tarun arora..
chirag jani மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து அசத்தினர். படம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று படம் ஓடிக்கொண்டிருக்கிறது முதல் நாள் பெரிய வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமாரான வசூலை அள்ளிது.
இந்த நிலையில் இரண்டாவது நாளில் மாற்றம் ஏற்படுமா என்று பார்த்தால் அந்த அளவுக்கு பெரிய மாற்றமும் இல்லை இரண்டு நாள் முடிவில் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் வெறும் 7.5 கோடி மட்டுமே வசூலித்து உள்ளதாக தெரிகிறது. ஜெயம்ரவி கேரியரில் குறைந்த வசூல் செய்த திரைப்படமாக இது பார்க்கப்படுகிறது.
கோலிவுட் வட்டாரத்தில் பெரிய பேச்சையும் எழுப்பி உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் வருகின்ற நாட்களில் அகிலன் படத்தின் வசூல் அதிகரிக்க கூட வாய்ப்பு உள்ளது என்று.. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி இறைவன், பொன்னியின் செல்வன் 2 சைரன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.