நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு முன்னணி ஹீரோ. வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து அசத்தி வருவதால் ரசிகர்களும் சந்தோஷமாக இருந்து வந்தனர் ஆனால் இவர் கடைசியாக ஹச். வினோத்துடன் கைகோர்த்து அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்தார் இந்த படத்தின் சூட்டிங் எடுக்கவே இரண்டு வருடங்கள் ஆனது.
இதுவே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு வருத்தமான செய்தியாக அமைந்தது. இருப்பினும் படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்தவுடன் தொடர்ந்து வலிமை படத்திலிருந்து அப்டேட்டுகள் வெளிவந்தன. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அம்மா பாடல், glimpse வீடியோ, வேற மாதிரி பாடல், ட்ரெய்லர் என அனைத்துமே ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்து உள்ளதோடு மட்டுமல்லாமல் வலிமை படத்தை பார்க்க ஆசையை தூண்டிவிட்டது.
அதற்கு ஏற்றார்போல் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வருகிறோம் என செய்தியை பரப்பியது ஆனால் எதிர்பாராதவிதமாக கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைந்ததால் திரையரங்குகிளில் 50 பர்சன்டேஜ் இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இப்பொழுது படத்தை வெளியிடுவது முக்கியமில்லை மக்கள் மற்றும் ரசிகர்கள் முக்கியம் என்பதற்காக படத்தை ஒதுக்கி வைக்க சொன்னார்.
அதன்படியே நடந்தது இதனால் வலிமை படம் எப்போது வரும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருந்தது. அதற்கு முடிவு கட்டும் வகையில் தற்பொழுது வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஒரு சிறப்பான செய்தியை வெளியிட்டுள்ளார் அதில் அவர் சொன்னது ரசிகர்கள் இனி கவலைப்பட தேவையில்லை வலிமை படம் நிச்சயம் வருகின்ற மார்ச் மாதம் வெளியாக உள்ளதாக தெரிவித்தார்.
மார்ச் 18 அல்லது 25 ஆகிய தேதிகளில் கண்டிப்பாக வலிமை திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என அடித்துக் கூறி உள்ளதால் ரசிகர்கள் இப்போது பெருமூச்சு விட்டு சந்தோஷமடைந்து வருகின்றனர்.