தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. அந்த வகையில் தற்பொழுது வரையிலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் இதனை அடுத்து அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்குனர் என கூறப்பட்டது.
அந்த வகையில் விக்னேஷ் சிவனும் தன்னுடைய கதையை அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனம் லைக்காவிடம் கூற இவர்களுக்கு அந்த கதை பிடிக்காத காரணத்தினால் விக்னேஷ் சிவனை ஏகே 62 திரைப்படத்திலிருந்து நீக்கிவிட்டனர். இந்நிலையில் அடுத்ததாக ஏகே 62 திரைப்படத்தினை இயக்குனர் மகிழ்திருமேனி தான் இயக்குகிறார் என சில நாட்களாக தகவல் வைரலாகி வந்தது.
அந்த வகையில் மகிழ்திருமேனி கூறிய இரண்டு கதைகளும் அஜித்துக்கு பிடித்து போனதாகவும் விரைவில் இயக்கிய 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்பட்டது. அதன் பிறகு அஜித் மகிழ்திருமேனி இவர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையதளத்தில் கைரலான நிலையில் தற்போது ஏகே 62 படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்க உள்ளார் என்ற தகவலும் பரவி வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது ஏகே 62 திரைப்படத்தில் யார் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. ஆம், அந்த வகையில் ஏகே 62 திரைப்படத்தில் அஜித்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான தடையை தாக்க, தடம் ஆகிய திரைப்படங்களில் அருண் விஜய் நடித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.
மேலும் இதற்கு முன்பே அஜித்துக்கு வில்லனாக என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய் நடித்து மிரட்டி இருந்தார். அந்த வகையில் ஏகே 62 திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடித்த அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.