நடிகர் அஜித் சமீப காலமாக சமூக அக்கறை கலந்த படங்களில் நடித்து வருகிறார் அந்த படங்களும் அவருக்கு வெற்றியையும் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த துணிவு படம் பேங்கில் நடக்கும் குளறுபடிகளை அப்பட்டமாக காட்டி மக்களுக்கு விழிப்புணர்வை கொடுத்தது.
இதனால் அந்த படம் அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக 230 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது அதனைத் தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க லைகா நிறுவனத்துடன் அஜித் கூட்டணி அமைத்து நடிக்க திட்டமிட்டார். முதலில் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்க உள்ளார் என தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் அவர் சொன்ன கதை எதிர்பார்த்த அளவுக்கு திருப்திகரமாக இல்லாததால் லைகா நிறுவனம் அவரை நீக்கியது இதனை அடுத்து மகிழ் திருமேனிடம் கதை கேட்டது அவர் சொன்ன கதை பிடித்து போகவே அவரை ஏகே 62 படத்தின் இயக்குனராக கமிட் செய்துள்ளது வெகு விரைவிலேயே இதற்கான அறிவிப்புகள் வரும் என சொல்லப்படுகிறது.
அடுத்த சில நாட்களிலேயே எகே 62 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் ஏகே 62 படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. முதலில் ஏகே 62 படத்தின் டைட்டில் டேர்டெவில் அல்லது டெவில் என இருக்கும் என இணையதள பக்கங்களில் வெளியான நிலையில் தற்பொழுது இந்த படத்திற்கு “துருவன்” என பெயர் வைக்கவே..
அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த படத்திற்கு இப்படி பெயர் வைக்க காரணம் இருக்கிறது அதாவது இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் பேக் திரைப்படமாக இருக்கும் என்பதால் தான் இந்த படத்திற்கு துருவ என பெயர் வைக்கப்பட இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம் உறுதியாக அறிவிப்பு வரை..