இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி என்ற திரைப்படத்தை இயக்கி சினிமா உலகில் கால் தடம் பதித்தார் அதனை தொடர்ந்து நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் இப்பொழுது நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியவர்களை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இந்த படம் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கி வருகிறது இதனால் படக்குழு செம சந்தோஷத்தில் இருக்கிறது விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித்துடன் முதல் முறையாக கைகோர்த்து AK 62 படத்தை எடுக்க இருப்பது உறுதியாகிவிட்டது.
இதனையடுத்து அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் விக்னேஷ் சிவன் இப்படி இருக்கின்ற நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் காக பல்வேறு பேட்டி கொடுத்து வந்தார் விக்னேஷ் சிவன் அப்போது அவரிடம் அஜித்தை வைத்து நீங்கள் ஒரு படத்தை இயக்கப் போகிறீர்கள்.
அது குறித்து ஏதாவது சொல்ல முடியுமா என கேட்டனர் அஜித் ரசிகர்களுக்காக ஒன்றை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என சொல்லி உள்ளார் அதில் அவர் சொன்னது : என்னுடைய படம் எனது பாணியில் இருக்கும் அந்த வகையில் அந்த படமும் அப்படித்தான் இருக்க வேண்டும் இதுதான் டாஸ்க்..
தோனி கூறியது போல நம்மால் முடிந்த அளவு முயற்சி செய்வோம் வெற்றி தோல்வி நம் கையில் இல்லை என தெரிவித்தார் விக்னேஷ் சிவன் இதுவரை எடுத்த படங்கள் எல்லாமே ஒரு சிம்பிளான கதையை மையமாக வைத்து தான் படம் உருவாகியிருக்கும் அந்த கதையை அஜித்திற்கு இது செட் ஆகுமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.