இணையதளத்தில் உலா வரும் AK 62 பட கதை.? தர லோக்கலாக இறங்கும் அஜித்

ajith
ajith

நடிகர் அஜித்குமார் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார் அந்த வகையில் கடைசியாக  இளம் இயக்குனர் ஹச். வினோத்துடன் கூட்டணி அமைந்து அஜித் நடித்த துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி நடிகர் விஜயின் வாரிசு படத்துடன் போட்டி போட்டது.

துணிவு படம் பேங்கில் நடக்கும் குளறுபடிகளை அப்பட்டமாக எடுத்து காண்பித்தது அதே சமயம் இந்த படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட் போன்றவை சிறப்பாக அமைந்ததால் துணிவு படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில்  அமோக வரவேற்பை பெற்று  அதிக நாட்கள் ஓடியது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக வெற்றி கண்டது.

இந்த படத்தை தொடர்ந்து லைகா நிறுவனத்துடன் இணைந்து தனது 62 வது  படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது ஆனால் அவர் சொன்ன கதையின் இரண்டாவது பாதி சரியில்லாததால் அவரை கழட்டி விட்டு தற்பொழுது  இயக்குனர்  மகிழ்திருமேனி உடன் தஞ்சம் அடைந்துள்ளார்.

முதலில் இவர் படத்தின் கதையை வேகமாக ரெடி செய்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் ஏகே 62 படத்தின் கதை  இதுதான் என இணையதள பக்கத்தில் ஒரு தகவல் உலா வருகிறது. அதாவது ஏகே 62 திரைப்படம்  ஆக்சன் கலந்த அரசியல் படமாக உருவாக இருக்கிறதாம் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தனுஷின் புதுப்பேட்டை ஸ்டைலில் தான் ஏகே 62 திரைப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதனால் ஏகே 62 படத்திற்கான எதிர்பார்ப்பு தற்பொழுது அதிகரித்து காணப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை அப்படி இருந்தால் நிச்சயம் Ak 62 படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிப்பது மட்டும் உறுதி எனக்கூறி ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.