இறுதி கட்டத்தை நெருங்கிய ஏகே 62.? மகிழ் திருமேனி மீது நம்பிக்கை வைத்த அஜித்.. வெளிவந்த பரபரப்பு தகவல்

ajith
ajith

நடிகர் அஜித்குமார் லைகா நிறுவனத்துடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 62வது திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டு இருந்தார் முதலில் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என படகுழு சொல்லாமல் சொல்லியது ஆனால் விக்னேஷ் சிவன் சொன்ன கதையின் இரண்டாவது பாதி அந்த அளவுக்கு திருப்திகரமாக இல்லாததால் லைகா நிறுவனம்..

விக்னேஷ் சிவனை நிராகரித்தது இதனை அடுத்து மகிழ் திருமேனியிடம் கதை கேட்டது அவர் சொன்ன கதை லைகா நிறுவனத்திற்கு ரொம்ப பிடித்து போகவே ஸ்கிரிப்ட் வலுவாக்குங்கள் என கூறியது இதனால் மகிழ் திருமேனி இரவு / பகல் பார்க்காமல் அந்த கதையை வலுவாக்கி வருகிறாராம்.. அஜித் இதில் சில மாற்றங்கள் வேண்டும் என மகிழ் திருமேனியிடம் கேட்டுள்ளார்.

அதாவது இந்த படத்தில் எவ்வளவு எவ்வளவு ஆக்சன் இருக்கிறதோ அதே அளவிற்கு இந்த படத்தில் சென்டிமென்ட் மற்றும் எமோஷனல் சீன்கள் அதிகம் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாராம் அதன்படி அஜித்தின் ஆசையை நிறைவேற்ற படத்தின் கதைக்கு ஏற்ப எங்கே சென்டிமென்ட் சீன்களையும் செட் செய்து வருகிறாராம். சொன்னவுடன் அதை நிறைவேற்றி உள்ளதால் மகிழ் திருமேனி மீது அஜித் நம்பிக்கை வைத்துள்ளாராம்.

இறுதியாக மகிழ் திருமேனி அஜித் மற்றும் லைகா நிறுவனத்திடம் இந்த கதையை மீண்டும் ஒருமுறை சொல்லி ஓகே வாங்கி விட்டால் படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. உடனே ஷூட்டிங்  தேதி அறிவித்து விடுமாம்.. அதனை தொடர்ந்து ஏகே 62 படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவரும் என கிசுகிசுக்கப்படுகிறது .

விஷயத்தை கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள் அதற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். சீக்கிரம் முடியுங்கள் படத்தின் சூட்டிங் தொடங்குங்கள் நாங்கள் இந்த வருடம் ஏகே 62 படத்தை பார்க்க வேண்டும் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.