அஜித்துக்கு வில்லனாகும் ஜெயம் ரவி பட நடிகர்.! ஆட்டத்தை ஆரம்பிக்கும் விக்னேஷ் சிவன்

thunivu
thunivu

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் சமீபகாலமாக தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இப்பொழுது கூட ஹச் வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்து துணிவு என்ற ஆக்சன் திரைப்படத்தில் சூப்பராக நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இதில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில்  நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. துணிவு திரைப்படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படி இவர் ஆக்சன் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்த படங்கள் வெளிவந்து வெற்றியை ருசித்தாலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பழைய அஜித்தை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். காமெடி மற்றும் காதல் சம்பந்தமான படங்களில் அஜித் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதை பூர்த்தி செய்யும் வகையில் அஜித் அடுத்ததாக இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன்  கைகோர்த்து உள்ளார். இது அஜித்துக்கு 62 வது படம் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்ச அளவில்  தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ஏகே 62 திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக ஆணழகன் அரவிந்த்சாமி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கான அறிவிப்பு வெகு விரைவிலேயே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது அரவிந்த்சாமி அண்மைக்காலமாக வில்லனாக மிரட்டி வருகிறார் அதை நாம் தனி ஒருவன், போகன் போன்ற படங்களில் பார்த்திருப்போம் அதேபோன்று ஏகே 62 திரைப்படத்திலும் அஜித்துக்கு வில்லனாக மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.