புதுப்பேட்டை தனுஷ் லெவலுக்கு இறங்கி அடிக்க போகும் அஜித்.? ஏகே 62 – ல் இதை எதிர் பார்க்கலாமா.?

ak-62
ak-62

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் கடைசியாக வெளியாக்கிய திரைப்படம் துணிவு இந்த திரைப்படத்தைச் வினோத் அவர்கள் இயக்கியிருந்தார் போனி கபூர் அவர்கள் தயாரித்திருந்தார் பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக இந்த திரைப்படம் வெளியாகியது  இந்த திரைப்படத்துடன் விஜயின் வாரிசு திரைப்படமும் இணைந்து வெளியாகியது.

இரண்டு திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியானதால் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்தது அதேபோல் துணிவு திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அஜித் ஏகே 62 திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது.

இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியதில் இருந்து ரசிகர்களிடம் இரண்டு மடங்காக கொண்டாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் ஏ கே 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் அவர்கள் தான் இயக்க இருந்தார் ஆனால் ஒரு சில காரணங்களால் ஏகே 62 திரைப்படத்திலிருந்து விலகிவிட்டார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இடத்திற்கு தற்பொழுது மகிழ்திருமேனி வந்துள்ளார் இவர் ஏற்கனவே தடம் திரைப்படத்தை இயக்கியவர் இந்த நிலையில் அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை மகிழ்திருமேனி தான் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

அதேபோல் ஏ கே 62 திரைப்படம் முழுக்க முழுக்க கேங்க்ஸ்டார் திரைப்படம் ஆக உருவாக இருப்பதாகவும் இந்த திரைப்படம் அரசியல் கலந்த கேங்ஸ்டார்   திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட புதுப்பேட்டை போல் அரசியல் கலந்த திரைப்படமாக உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக கிசுகிசு கிளம்பி விட்டது.

இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை ஆனால் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே உறுதியாக நாம் கூற முடியும்.