ஆக்ஷன் காட்சி இல்லாத படமாக உருவாகும் ஏகே 62..? இணையதளத்தில் உலா வரும் தகவல்..

ak 62
ak 62

ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக நடித்து அமர்க்களம் படத்திற்கு பிறகு தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் கூட மிகப் பெரிய ஒரு ஆக்சன் திரைப்படமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் அஜித் நடித்திருக்கிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. மேலும் இதில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து பிக் பாஸ் பிரபலங்கள் மற்றும் டாப் நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். துணிவு படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீசாக உள்ளது.

அதனை தொடர்ந்து AK 62 படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் எடுக்க உள்ளார். முதலில் அஜித்தை சந்தித்து ஒரு அரசியல் கதையை சொல்லி இருக்கிறார் ஆனால் அது அஜித்திற்கு சுத்தமாக நடிக்க விருப்பம் இல்லாததால் வேறு ஒரு கதையை ரெடி செய்து உள்ளார்.

அந்த கதை அஜித்துக்கு ரொம்பவும் பிடித்து போனதாம். அந்த கதை எப்படி இருக்கும் என்றால் முகவரி படம் எப்படி இருக்குமோ அதுபோன்ற ஒரு பாணியில்தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. அப்படி என்றால் ஆக்சன் படத்திலிருந்து மாரி மீண்டும் ரசிகர்களும் மக்களும் கொண்டாடும் கமர்சியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி இரண்டாவது வாரம் அல்லது பொங்கலன்று பூஜையை போட்டு படபிடிப்பை ஆரம்பிக்கும் என சொல்லப்படுகிறது அதுவும் இந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் தான் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளி வருகின்றன.