கடந்த சில வருடங்களாக ஆக்சன் படங்களை மட்டுமே கொடுத்து கூடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்பொழுது நடித்துயுள்ள 61-வது திரைப்படமான துணிவு திரைப்படமும் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது இதில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
அஜித்துடன் இணைந்து பல டாப் நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி இருக்கின்றனர். படம் அடுத்த வருடம் பொங்கலை கூறி வைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது அதனை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் உடன் முதல் முறையாக இணைந்து தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க அஜித் திட்டமிட்டு இருக்கிறார்.
முதலில் விக்னேஷ் சிவன் அரசியல் கலந்த ஒரு கதையை கூறி இருக்கிறார் ஆனால் அஜித்திற்கு சுத்தமாக பிடிக்காமல் போனதால் வேறு ஒரு கதையை உடனடியாக எழுதி எடுத்துட்டு வந்து சொல்லி இருக்கிறார். அஜித்துக்கு ரொம்ப பிடித்து போகவே அது படமாக உருவாக இருக்கிறது. AK 62 திரைப்படம் ஆக்சன் இல்லாத ஒரு முகவரி படம் போன்று இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதனால் இப்பொழுது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் எ கே 62 படத்தின் ஷூட்டிங் எப்பொழுது தொடங்கும் என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி பார்க்கையில்..
அடுத்த வருடம் ஜனவரி இரண்டாவது வாரம் AK 62 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் படத்தின் முதல் ஷூட்டிங் மும்பையில் நடத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. இந்த செய்தி தற்போது அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது மேலும் இந்த தகவலை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு பரப்பி வருகின்றனர்.