ஏகே 62 படத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட விக்னேஷ் சிவன்.. பதிலுக்கு அவர் செய்த வேலை பாருங்கள்

ajith-
ajith-

நடிகர் அஜித் கடந்த சில சில வருடங்களாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பை அள்ளி தருகிறார் சிறுத்தை சிவாவை தொடர்ந்து இளம் இயக்குனர் எச். வினோத்துடன் தொடர்ந்து பயணித்த அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் உடன் கைகோர்த்து படங்களில் நடிக்க திட்டம் போடப்பட்டது.

முதலாவதாக அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் விக்னேஷ் இவன் சொன்ன கதை அஜித்துக்கும் சரி, தயாரிப்பு நிறுவனத்திற்கும் சரி சுத்தமாக பிடிக்கவில்லை. அதில் மாற்றங்கள் செய்ய சொன்னது.  விக்னேஷ் சிவன் மீண்டும் சில மாற்றங்களை செய்து கதையை கூறி உள்ளார்.

ஆனால் படக்குழுவுக்கு அது சுத்தமாக பிடிக்காமல் போக ஏகே 62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் கூறின.. மறுபக்கம் ஏகே 62 திரைப்படத்தை இளம் இயக்குனர் மகிழ்திருமேனி அவர்கள் இயக்க உள்ளதாகவும் செய்திகள் தொடர்ந்து வெளி வந்தன இது எந்த அளவிற்கு உண்மை என்பது ரசிகர்களுக்கு தெரியாமலேயே இருந்தது ஒரு வழியாக தற்பொழுது அதை விக்னேஷ் சிவனே உறுதிப்படுத்தி உள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித்தின் போட்டோவை இதுவரை வைத்திருந்த விக்னேஷ் சிவன் தற்பொழுது ஏகே 62 திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டதால்  அஜித்தின் புகைப்படத்தை நீக்கிவிட்டு.. எதற்கும் மனம் தளரக்கூடாது உண்மை உள்ள இடத்தில் உங்களுக்கான வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என கூறி தனது புகைப்படத்தை வைத்துள்ளார்.

இதை அறிந்த ரசிகர்கள் ஏகே 62 இல்லை என்றால் பரவாயில்லை ஏகே 63 – ல் அஜித்தை வைத்து நீங்கள் படம் பண்ணுவீர்கள் எனக் கூறி விக்னேஷ் சிவனுக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..

ak 62
ak 62