தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருவர் அஜித்குமார். இவர் அண்மை காலமாக சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டு நடித்தால் அவருடைய ஒவ்வொரு படமும் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. இவர் கடைசியாக நடித்த துணிவு படம் 230 கோடிக்கு மேல் அள்ளி வெற்றி பெற்றத்தை தொடர்ந்து அடுத்து AK 62 படத்தில் நடிக்க இருக்கிறார் என சில மாதங்களுக்கு முன்பே சொல்ல பட்டது.
முதலில் ஏகே 62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார். அவர் சொன்ன ஒன் லைன் ஸ்டோரி பிடித்துப் போகவே அஜித் படத்தில் நடிக்க கமிட்டானார் கடைசியாக விக்னேஷ் சிவன் சொன்ன முழு கதை அஜித் மற்றும் அந்த படத்தை தயாரிக்க இருந்த லைகா ப்ரொடக்ஷனுக்கு திருப்தி அளிக்காததால் விக்னேஷ் சிவனை வேண்டாம் என சொல்லி வேறு ஒரு இயக்குனரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இயக்குனர் மகிழ்த் திருமேனியை சந்தித்து அஜித்திற்கான கதையை ரெடி செய்ய சொல்லி இருந்தனர். இயக்குனர் மகிழ் திருமேனியும் AK 62 படத்தின் கதையை முழுவதுமாக தயார் செய்து பின்பு கதையைக் கேட்டு விட்டு பின்பு படப்பிடிப்பை தொடங்கலாம் என படக்குழு திட்டம் போட்டது.
மேலும் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் முடித்துவிட்டு அடுத்த கட்ட ஷூட்டிங் வேறு இடத்திற்கு செல்லலாம் என படக்குழு முடிவெடுத்துள்ளதாம்.. இந்த நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி வேறு ஒரு படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அதுவும் யார் படத்தில் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் தவிர்க்க நடிகரும், நடன கலைஞருமான பிரபுதேவா நடித்து வரும் “ரேக்லா” திரைப்படத்தில் தான் மகிழ்திருமேனி வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அஜித் AK 62 படத்தின் படப்பிடிப்பு தாமதம் என சொல்லப்படுகிறது. இதை கேள்விபட்ட அஜித் ரசிகர்கள் AK 62 எப்போ கேட்டு வருகின்றனர்.