AK-62 படத்தின் பட்ஜெட் மட்டுமே இத்தனை கோடியா.! எகிரும் அஜித் மார்கெட் வாய் பிளக்கும் கோலிவுட் சினிமா…!

ajith-vignesh-shivan
ajith-vignesh-shivan

அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உச்ச நடிகராகவும் வலம் வருபவர் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் தான் துணிவு இந்த திரைப்படத்தை எச் வினோத் அவர்கள் இயக்கியிருந்தார் இதற்கு முன் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய நேர்கொண்ட பார்வை வலிமை ஆகிய  திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக துணிவு திரைப்படத்தில் இணைந்து இருந்தார்கள்.

இந்தத் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு  மிகவும் பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகியது மேலும் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் அவர்கள் தான் இயக்க இருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்துக்கு அனிருத் அவர்கள் இசையமைக்க இருக்கிறார். அஜித் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருவதால் அஜித் தன்னுடைய சம்பளத்தை உயர்த்த அதிக திட்டம் போட்டுள்ளார் இந்த நிலையில் அஜித் இந்த திரைப்படத்திற்காக 100 கோடி சம்பளமாக வாங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தற்பொழுது அஜித் விக்னேஷ் சிவன் இணையும் திரைப்படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் இணையும் இந்த திரைப்படத்திற்கு 200 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் துணிவு திரைப்படத்தின் மூலம் அஜித்தின் மார்க்கெட் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது இதனால் துணிவு திரைப்படம் தமிழகத்தில் தயாரிப்பாளர்களுக்கு 60 முதல் 70 கோடி வரை ஷேர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனால் இனி அஜித்தின் திரைப்படத்தை தமிழகத்தில் 80 கோடி ரூபாய்க்கு விற்பதற்கு படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் துணிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் அஜித்தின் 62 திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையரங்கில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனமே ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளது இதனால் படக்குழுவினருக்கு பெத்த லாபம் கிடைக்கும் என தகவல் கிடைத்துள்ளது.