AK 62 திரைப் படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் இதுதான் இலை மறக்காயாக விக்னேஷ் சிவன் சொன்ன தகவல்..! அப்போ படம் கோலமாஸா இருக்கும் போல.!

viknesh shivan
viknesh shivan

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவர் இவர் இயக்கத்தில் வெளியாகிய போடா போடி நானும் ரவுடி தான் தானா சேர்ந்த கூட்டம் பாவ கதைகள் ஆகிய திரைப்படங்கள் வெளியாகியது இந்த நிலையில் தற்போது நயன்தாரா சமந்தா விஜய் சேதுபதி அவர்களை வைத்து காத்திருந்த காதல் திரைப்படத்தை இயக்கிய இந்த திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித் அஜித்தை வைத்து அஜித் 62 திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டார். மேலும் விக்னேஷ் சிவன் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தின் புரமோஷன்  நிகழ்ச்சியில் அஜித் 62 படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறிய விஷயம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

அதாவது அந்தப் பேட்டியில் விக்னேஷ் சிவன் தனக்கு அஜித் சாரின் வாலி மற்றும் மங்காத்தா திரைப்படம் மிகவும் பிடிக்கும் எனவும் அதிலும் மங்காத்தா திரைப்படத்தின் இன்டர்வெல் காட்சியில் அவர் மட்டுமே அந்த சீனில் நடித்திருப்பார் அந்த காட்சி மிகவும் எனக்கு பிடித்திருந்தது அதனால் அஜித் 62 படத்தையும் அதுபோல்தான் எடுக்க முயற்சி செய்வேன் என விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவன் இவ்வாறு கூறியுள்ளது அஜித் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது ஏனென்றால் மீண்டும் மங்காத்தா போல் ஒரு திரைப்படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்படி இருக்கையில் விக்னேஷ் சிவன்இந்த நேரத்தில் இதுபோல் கூறியுள்ளது ரசிகர்களிடையே சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

இந்த தகவலை அஜித் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து லைக் செய்து வருகிறார்கள்.