அஜித் வினோத் இயக்கத்தில் நடித்த வலிமை திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் அஜித் இந்த திரைப்படத்தில் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி பைக் ரேஸ் காட்சிகளில் மிரட்டி இருந்தார். மேலும் வலிமை திரைப்படத்தில் ஹீமா குருஷி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ஆக்ஷன் கலந்த இந்த திரைப்படம் ஒரு சிலரிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அஜீத் அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் எனவும் இந்த திரைப்படத்தில் அஜித் டபுள் ரோல் எனவும் ஒரு அஜித் ஹீரோவாகவும் மற்றொரு அஜித் வில்லனாகவும் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்தது இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவாக தொடங்க இருக்கிறது.
இந்தநிலையில் அஜித் 62 திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் தயாரிப்பாளர் யார், மியூசிக் டைரக்டர் யார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில். பல இயக்குனர்கள் பெயர் அடிபட்டது ஆனால் தற்பொழுது ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே கொண்டாட வைத்துள்ளது.
அஜித் 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை திரு சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாக இருக்கிறது. லைகா தயாரிப்பில் அஜித் நடிக்க இருப்பதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி விடும் என அறிவித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த திரைபடத்தில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் லைக்கா நிறுவனம் திரு அஜித் குமார் உடன் கை கோர்த்தது லைக்கா மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது ஒரு குழுவாக பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்கி நேர்மையான மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பை மேற்கொள்ள உறுதி அளித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.