விக்னேஷ் சிவனுக்கு நீதி கேட்டு ட்விட்டரில் ட்ரெண்ட்யாகும் AK 62 மற்றும் மீம்ஸ்.! கடுப்பில் ரசிகர்கள்..

AK-62

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி அன்று வெளியாகி வெற்றிகரமாக தற்பொழுது வரையிலும் மிகவும் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்திருந்தார்.

மேலும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்வதற்கான உரிமையை பெற்றது இந்த படத்தில் சமுத்திரகனி, சதீஷ், பாவனி, அமீர் உள்ளீட்டு ஏராளமானவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வணிகரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்பொழுது ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது இந்த படத்தை நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தில் நடிகர், நடிகைகள் யார்? யார்? நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ak 62 1
ak 62 1

அந்த வகையில் ஏகே 62 திரைப்படத்தில் வீரம், கிரீடம், பில்லா படங்களுக்கு பிறகு சந்தானம் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அஜித் நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படத்தின் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தினால் இந்த படத்தை இயக்குவதில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலங்குவதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

ak 62

இதனை அடுத்து விக்னேஷ் சிவன் இருக்க பதிலாக இந்த படத்தினை இயக்குவதற்கு விஷ்ணு அல்லது அட்லி போன்ற பெரிய இயக்குனர்கள் இயக்க இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் Justice for VigneshShivan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்காகி வருகிறது.