நடிகர் அஜித் தமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு ஒரு சிறப்பான படத்தை கொடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் இவரது படத்தின் கதை எப்படி இருக்கிறது என்பது இரண்டாம் பட்சம் ஆனால் அஜித் படம் வெளி வருகிறது என்றால் அவரது ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பார்கள்.
அப்படித்தான் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இருந்தாலும் வலிமை படத்தின் கதை சுமாராக இருந்ததாகவே பலரும் கூறினர். இந்த நிலையில் அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுத்த வலிமை படத்தை இயக்கிய அதே இயக்குனருடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை இருந்தாலும் இந்த படம் ஒரு பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகி வருவதாக சில தகவல்கள் கசிந்தன. அஜித்தின் 61வது படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் முடிவடைந்த நிலையில் சிறு இடைவேளை காரணமாக அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு வீடு திரும்பினார்.
அங்கு அவர் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியது. தற்போது இந்த படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் பூனேவில் தொடங்கப்பட செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, நடிகர் வீரா, ஜான் கொக்கேன், அஜய் போன்ற நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளதாக..
செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அஜித்தின் 61வது படத்தில் இணைய உள்ள மற்றொரு பிரபல நடிகர் ஒருவர் குறித்த தகவல் வெளிவந்துள்ளன. ஆம் கே ஜி எஃப் 2 படத்தில் யாஷுக்கு வில்லனாக நடித்து மிரட்டி இருந்த சஞ்சய் தத் அஜித்தின் 61வது படத்தில் இணை உள்ளதாக கூறப்படுகின்றன.