AK 61 : படத்தை முதலில் எடுக்க இருந்தது இவரா.? அப்புறம் தான் ஹச். வினோத் கைக்கே மாறியதாம்.! என்ன காரணம் தெரியுமா.?

AJITH
AJITH

நடிகர் அஜித்குமார் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குநர்களையும், தயாரிப்பாளர்களையும் நம்பி கதையை பெரிதளவு கேட்காமல் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் அந்த காரணத்தினால் தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்த நடிகராக மாறினார் அஜித்.

ஆனால் அவரது ரசிகர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து அவருக்கு ஆதரவு கொடுத்தனர் அதை உணர்ந்து கொண்ட ஒரு கட்டத்தில் கதை தேர்வு செய்ய ஆரம்பித்தார் அதன்பின் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். சொல்லப்போனால் சமீபகாலமாக இவர் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் விசுவாசம், நேர்கொண்ட பார்வை மற்றும் இப்பொழுது வலிமை ஆகிய அனைத்துமேமக்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

அஜித்தின் மனைவி ஷாலினி சமீபகாலமாக அஜித்தின் அடுத்த பட இயக்குனர்களை செலக்ட் செய்வது மற்றும் அவர்களுடன் கதை சிபாரிசு செய்வது போன்றவற்றை அவர்தான் செய்கிறாம். இப்பொழுது ஹச். வினோத் போன்ற இயக்குனர்களை அஜித் படங்களில் கமிட் செய்து ஷாலினி தான் என கூறப்படுகிறது.

ஹச். வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை ஆகிய படங்களை பார்த்து இப்படி ஒரு இயக்குனர் கிடைத்தால் நிச்சயம் சிறப்பான படத்தைக் கொடுப்பார் என நம்பி தான் ஷாலினி அவரது கதைகளை சொல்லி தேர்வு செய்தாராம் அதற்கும் அஜித் ஓகே சொல்லிவிடுவார் அந்தக் காரணத்தினால் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்  அஜித்.

அப்படித்தான் வலிமை திரைப்படமும் உருவானதாக கூறப்படுகிறது. படமும் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஷாலினி அஜித்தின் அடுத்த படத்தையும் பணியாற்ற சொல்லி உள்ளார். உண்மையில் சொல்லப்போனால் ஆரம்பம், பில்லா ஆகிய படங்களை எடுத்து அசத்திய விஷ்ணுவர்தன் தான் அஜித்தின் 61 வது திரைப்படத்தை எடுக்க அதிக வாய்ப்புகள் இருந்ததாம் சொல்லப்போனால் கதை எல்லாம் சொல்லி ஓகே எல்லாம் வாங்கி விட்டாராம்.

திடீரென ஷாலினி அந்த வாய்ப்பை ஹச். வினோத்துக்கே மீண்டும் கொடுத்துள்ளதால் வேறுவழியில்லாமல் மவுனமாக இருக்கிறார். ஆனால் அஜித்தின் 62வது திரைப்படத்தை இயக்க அவருக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.