தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். அண்மைக் காலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர்ஹிட் அடிக்கின்றன அந்த வகையில் விசுவாசம் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் வலிமை திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் சென்டிமெண்ட் கலந்த படமாக இருந்ததால்..
ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களையும் இந்த திரைப்படம் வெகுவாக கவர்ந்தது மேலும் நீண்ட நாட்கள் ஓடியது இதன் மூலம் நல்லதொரு வசூலையும் கண்டது ஆம் இதுவரை திரைப்படம் 200 கோடிக்கு மேல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன தற்போது திரையரங்கில் பெரிய அளவில் இந்த படம் ஓடவில்லை.
என்றாலும் OTT தளத்தில் வெளியாகி புதிய சாதனைகளை படைத்து வருகிறது. அஜித் இந்த திரைப்படத்தை வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து தனது அடுத்த அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அந்த வகையில் அஜித்தின் 61, 62 படத்திற்கான இயக்குனர்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளனர்.
அஜித்தின் 61 வது திரைப்படத்தை வினோத் இயக்கவுள்ளார். இரண்டாவது திரைப்படத்தை நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. முதலாவதாக அஜித்தின் 61 வது திரைப்படம் அதிரடியாக உருவாக இருக்கிறது.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்திற்கு இணையான நடிகர்களை களமிறக்க முயற்சி செய்து வருகிறது குறிப்பாக மலையாள நடிகர் மோகன்லால் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வளர்ந்து வரும் நடிகர் கவினும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
இந்தப் படத்தின் கதை முற்றிலும் வித்தியாசமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது அதாவது அஜித்தின் கதாபாத்திரம் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் அஜித் இந்த படத்தில் ஒரு professor ராக நடிக்கிறார் என்றும் இந்த படத்தில் நடிகர் கவின் கல்லூரி மாணவனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.