நடிகர் அஜித்குமார் தொடர்ந்து தமிழில் பல சிறப்பான படங்களை தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார் அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை திரைப்படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கியிருந்தார் இந்த இயக்குனருடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து கடைசியாக வலிமை.
என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் இந்த ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வசூலை வாரிக் குவித்த நிலையில் இடைவெளி எடுக்காமல் அஜித் உடனடியாக தனது அடுத்த படத்திலும் ஹெச் வினோத் உடன் கூட்டணி அமைத்து தற்போது அஜித்தின் AK 61படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தையும் வலிமை படத்தை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட உள்ளதால் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஒரு பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகி வருவதாக தெரியவருகிறது.
அதனால் இந்த படத்திற்காக அஜீத் தனது உடல் எடையை குறைத்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் கூட இணையதளத்தில் வெளியாகியது. மேலும் AK 61 படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, நடிகர் தீரா போன்ற முக்கிய நடிகர் நடிகைகள் நடித்து வருகின்ற நிலையில் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் AK 61.
படத்தின் ஷூட்டிங் ஸ்பார்ட் வீடியோ ஒன்று கசிந்துள்ளது இந்த வீடியோவை ரசிகர் ஒருவர்தான் எடுத்து வெளியிட்டனர் என்பதுபோல் தெரியவருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் தனது அடுத்த 62வது படத்தை இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Unseen One #AK61 😍
Nirav Shah – H.Vinoth – AK ❤ pic.twitter.com/JTl0M653G1
— 💞 Chocoboy Thala Addicter 💞 (@Nithin60198089) June 5, 2022