நடிகர் அஜித்குமார் தனது 61 வது திரைப்படத்திற்காக அதிரடியாக உடல் எடையை குறைத்து திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்துவருகிறார் அஜித்துடன் கைகோர்த்து இந்த பாடத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர், சமுத்திரகனி, இளம் நடிகர் வீரா என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரி மையமாக வைத்து இந்த படம் உருவாக இருக்கிறதாம். அதே சமயம் இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. மங்காத்தா திரைப்படத்திற்குப் பிறகு அஜித் நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு திரையரங்கில் வெளியிட படக்குழு முனைப்பு காட்டி வருகிறது இதனால் அஜித்தும் இரவு பகல் பார்க்காமல் கடந்த 41 நாட்களாக இந்த படத்தில் நடித்ததாக கூறப்படுகிறது இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக அஜித் தற்போது புனே சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
இப்படிப் போய்க்கொண்டிருக்க தீபாவளியன்று அஜீத் படத்தையும் தாண்டி கார்த்தியின் சர்தார் சிவகார்த்திகேயன் பிரன்ஸ் ஆகிய திரைப்படங்களும் வெளியாகிய மோத இருக்கின்றன. முன்னணி நடிகர்களின் இரு திரைப்படங்கள் மோதுவதால் அஜித் 61வது திரைப்படம் இதிலிருந்து விலகும் என கூறப்படுகிறது.
ஏனென்றால் இந்த இரண்டு திரைப்படங்கள் தீபாவளிக்கு வரும் என சொல்லிவிட்டது ஆனால் அஜித் திரைப்படம் இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. அதை வைத்து பார்த்தால் தீபாவளி ரேசில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேணாலும் நடக்கலாம்.