தளபதி விஜய் தமிழ் சினிமா இயக்குனர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த நிலையில் முதல் முறையாக தெலுங்கு இயக்குனருடன் கைக்கோர்த்த தனது 66வது படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது அந்த பூஜையில் சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் சூட்டிங் ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் முதற்கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தில் இவர்களையும் தாண்டி நடிகர் பிரகாஷ்ராஜ், ஷாம், பிரபு மற்றும் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றன இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் தில் ராஜூ தயாரிக்கிறார்.
விஜய்க்கு எப்போதும் மாஸ் கலந்த படங்களில் நடிப்பது வழக்கம் அந்த திரைப்படங்கள் அவருக்கு வெற்றியை பெற்றுத் தந்துள்ளன. அந்த வகையில் இந்த திரைப்படமும் மாஸ் கலந்த ஒரு அதிரடி படமாக உருவாகும் என தெரியவருகிறது.
தளபதி 66 திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது ஏனென்றால் பல்வேறு டாப் நடிகர்கள் படங்கள் வருகின்ற தீபாவளியை குறி வைத்துள்ளன. குறிப்பாக அஜித்தின் 61வது திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது என அதிரடியாக கூறியதை..
அடுத்து விஜய்யின் படமும் தீபாவளி அன்று வெளியாகுமா எனக் கேட்டுக் கொண்டு வருகின்றனர் இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ஒரு செய்தி ஒன்று உலா வருகிறது அதாவது தளபதி 66 திரைப்படம் 2023 பொங்கலன்று படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிரடியாக அறிவித்துள்ளது.