அஜித்தின் கதாபாத்திரத்தை லீக் செய்த ஸ்டன்ட் மேன்.! ஏகே 61 அப்டேட்.!

ajith 61 latest

அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய அறுபத்தி ஒன்றாவது  திரைப்படமாக AK 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக AK 61 என டைட்டில் வைத்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படம் சென்னையில் இருப்பது போல் கதை அமைக்கப்பட்டு உள்ளதால் சென்னை அண்ணா சாலை போன்ற மிகப்பெரிய செட் ஒன்று போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் மணி ஹெய்ஸ்ட் வங்கி கொள்ளையை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது வில்லனும் ஹீரோவும் அவரே எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இந்த தகவல்   உறுதியாகவில்லை.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்த திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து பணிபுரியும் சண்டை கலைஞர் ஒருவர் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ஒரு ஸ்டன்ட் மேன் அஜித் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது அஜித் ஒரு வில்லன் கேரக்டரில் நடிக்க இருப்பது உறுதியாக தெரிகிறது இந்த நிலையில் இந்த திரைப் படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர் சமுத்திரகனி என பலரும் நடித்து வருகிறார்கள் போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தை ஹெச் வினோத் அவர்கள்   இயக்கி வருகிறார்.

இதுவரை இந்த திரைப்படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட் வெளியாகாமல் இருந்துவரும் நிலையில் ஏதாவது அப்டேட் கிடைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தகவல் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ajith61
ajith61