AK 61 படம் வேற லெவெலில் இருக்கும் போல.. புதிய கெட்டப்பில் அசத்தும் அஜித்.! வைரல் வீடியோ இதோ.

AJITH
AJITH

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத ஒரு முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் அடித்து நொறுக்கியது.

வலிமை படம் 200 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது அதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் தான் AK 61. இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரி வைத்து நகர்வதால் ஆக்ஷனுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என தெரிய வருகிறது.

மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு 25 கிலோ உடல் எடையை குறைத்து புதிய லுக்கில் வருகிறார். இந்த படத்தின் செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன இந்த படம் வெறும் 75 நாட்களிலேயே எடுத்து முடிக்க அவகாசம் அஜித் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால் ஹெட்ச் வினோத் தனது படக்குழுவை தயார் செய்து பணிகளை தொடங்க ரெடியாக திட்டமிட்டு இருக்கிறாராம்.

இந்த படத்தில் பல நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது இந்த படம் ஆக்ஷனுக்கு பஞ்சமில்லாமல் வேற ஒரு தருணத்தில் ஹச். வினோத் எடுக்க இருக்கிறார். வலிமை படம் போல இந்த தடவை அவருக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் அவருக்கு ஏற்றப்படி காட்சிகளை அமைக்க வினோத்துக்கு ஃப்ரீடம் கொடுத்துள்ளார்.

இதனால் அவரும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்குமார் புதிய கெட்டப்பில் பைக்குகளை பார்த்து என்ஜாய் பண்ணும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை நீங்களே பாருங்கள்.