நடிகர் அஜித் குமார் மூன்றாவது முறையாக ஹச். வினோத்துடன் இணைந்து தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை மிகப் பிரமாண்ட பொருட்செலவில் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க வித்தியாசமான ஒரு கதையை உருவாக்க இயக்குனர் பெறுவது திட்டம் போட்டுள்ளார் இதற்கு முன் வினோத்தின் படங்களில் அஜித் தலையீடு சற்று இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த தடவை முழுக்க முழுக்க இயக்குனர் இடமே அனைத்தையும் ஒப்படைத்து விட்டதால் ஹச். வினோத் இந்த படத்தை தரமான எடுக்க ரெடியாகி உள்ளாராம். ஐதராபாத்தில் இந்த படத்தின் சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது இதற்காக பிரமாண்ட செட் போடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.
அதனைத் தொடர்ந்து AK 61 படத்தில் அஜித்துக்கு வில்லனாக யார் நடிப்பார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. தற்போது அதற்கும் பதில் கிடைத்துள்ளது.அதன்படி பார்க்கையில் AK 61 படத்தில் அஜித்திற்கு வில்லனாக சமீபகாலமாக வில்லன் ரோலில் கலக்கும் நடிகர் JOHN HIGHKOGHON என்பவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.
குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை, KGF 2 ஆகிய படங்களில் இவரது நடிப்பு மிரட்டும் வகையில் இருந்தது அவர் அஜித்துடன் முதல் முறையாக இணைந்து உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருப்பதாக தெரிய வருகின்றன.
இந்த வில்லன் இதுவரை நடித்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக மாறி உள்ளன அந்த வகையில் அஜித்துடன் இவர் இணைந்துள்ளதால் நிச்சயம் AK 61 திரைப்படம் சூப்பர் ஹிட் அடிக்க்கும் என கூறப்படுகிறது.