AK 61 : படத்தில் அஜித்துக்கு ஜோடி இவரா.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்.!

ajith

நடிகர் அஜித்குமார் கடைசியாக ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து வலிமை திரைப்படத்தில் நடித்தார்.  இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்ட நாளில் இருந்து வெளிவரும் வரை பல்வேறு சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்தித்து நீண்ட காலம் ஆனது அண்மையில் கூட ஒரு வழியாக கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி உலகம் முழுவதும்.

கோலாகலமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் மிகவும் சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் படத்தை வேறு தேதியில் மாற்றியதே வலிமை படக்குழு. இந்த படம் வருகின்ற  இருபத்தி நான்காம் தேதி கோலாகலமாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. படம் வருகின்ற படி வரட்டும் என கூறி நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தில் பணியாற்றிய அதே குழுவுடன்.

மீண்டும் ஒரு முறை இணைந்து  தனது 61 வது திரைப்படத்தில் நடிக்க முனைப்பு காட்டி உள்ளார். வருகின்ற மார்ச் 9ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் இந்த வருடம் இரண்டு படங்களை கொடுத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்த ஆயத்தமாக இருக்கிறார். இந்த படத்திற்கான நடிகர் நடிகைகளை பட குழு தேர்வு செய்து வருகிறது.

அந்த வகையில் அஜித்குமார் 61 திரைப்படத்திற்கு யார் ஹீரோயின் ஆக இருப்பார் என்பதே தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இயக்குனர் ஹச். வினோத் அண்மையில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களுடன் அஜித் நடித்து விட்டார் அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு இருக்கும் வயது வித்தியாசம் நிறைய இருக்கிறது. அதனால் நாங்கள் ஹிந்தி சினிமா பக்கத்திலிருந்து நடிகைகளை இறக்கி இருக்கிறோம் என கூறினார்.

இந்த நிலையில் அஜித்குமார் 61வது திரைப்படத்தில் பிரபல நடிகையை நடிக்க வைக்க படக்குழு முனைப்பு காட்ட உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நடிகை வேறு யாரும் அல்ல அதிதி ராவ். இவர் இதுவரை காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம், சைக்கோ போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

aditi rao
aditi rao