ஏகே 61 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியான அரை மணி நேரத்தில் பிளக்ஸ் பேனர் அடித்த தல ரசிகர்கள்.!

ak-61
ak-61

நடிகர் அஜித் குமார் அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் மேலும் இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் சமித்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் அஜித் நடிக்கும் ஏகே 61 திரைப்படத்திற்கு துணிவு என டைட்டில் வைக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஷ்டருடன் வெளியானது இதில் நடிகர் அஜித்குமார் அவர்கள் கையில் துப்பாக்கியுடன் ஜேரில் அமர்ந்து உள்ளார். மேலும் எச் வினோத் அவர்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுடன் சேர்த்து படம் நின்னு பேசும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதனை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் துணிவு பணத்தில் டைட்டிலை ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.

AK61
AK61

இந்த திரைப்படம் பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இந்த நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான உடனே அரை மணி நேரத்தில் பிளக்ஸ் மற்றும் பேனரை தயார் செய்து விட்டார்கள் அஜித் ரசிகர்கள்.

இதையும் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடனே அஜித் அவர்கள் 62 ஆவது படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது மேலும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் பட பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டில் முடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏகே 61 திரைப்படம்  அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ அந்த புகைபடம்.

AK61
AK61