நடிகர் அஜித்குமார் தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாக்குவதால் அஜித் இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து புதிய லுக்கில் நடிப்பு வருகிறார் என கூறப்படுகிறது.
AK 61 படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர் வீரா சமுத்திரக்கனி மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். முதல் கட்ட ஷூட்டிங் 51 நாட்கள் இரவு பகல் பார்க்காமல் விறுவிறுப்பாக நடந்தது. அதனை தொடர்ந்து படக்குழு இரண்டாவது கட்ட ஷூட்டிங்கிற்கு சிறு இடைவெளி விட்டது.
நடிகர் அஜித் உடனே ஐரோப்பிய நாடுகள் பக்கம் பைக்கில் சுற்றி திரிந்து வருகிறார் அதன் புகைப்படங்கள் தொடர்ந்து வெளி வருகின்றன வெகு விரைவில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்வாரென கூறப்படுகிறது
இருந்தாலும் ரசிகர்கள் மனதில் ஒரே ஒரு கேள்விதான் அதாவது AK 61 படம் தீபாவளிக்கு வருமா.. வராதா.. என கேட்டுக்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது.
அஜித்தின் கேரியரில் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக ஏகே 61 இருக்கும் என்றும் , இயக்குனர் இந்த கதையை மிகச் சிறப்பாக இயக்கி வருகிறார் என்ற தகவலையும் கூறி உள்ளார் மேலும் ஏகே 61 திரைப்படம் நிச்சயமாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என அவர் கூறியுள்ளார். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் இச்செய்தி ரசிகர்களை சற்று சந்தோஷம் அடைய வைத்துள்ளது.