தமிழ் சினிமாவுலகில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். இவர் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை ஹச். வினோத் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து இளம் நடிகர் வீரா, மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. AK 61 படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை வைத்து படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார்.
அதிரடியாக 20 இருந்து 25 கிலோ உடல் எடையை குறைத்து தன்னை முற்றிலுமாக மாற்றிக் கொண்டுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இரவு பகல் பார்க்காமல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது இதுவரையில் 90% படத்திற்கான ஷூட்டிங் முடிந்த நிலையில் இன்னும் 10% மட்டுமே எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.
அடுத்த கட்டமாக AK 61 புனே மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் படத்தின் ஷூட்டிங் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. படக்குழு சொன்னது போலவே படத்தின் ஷூட்டிங்கை சீக்கிரமாகவே முடித்து மற்ற வேலைகளை கையில் எடுத்து முடித்த உடனேயே வருகிற தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய தயாராக இருக்கிறதாம்.
இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு நடிகர் மட்டும் AK 61 படத்தின் மொத்த காட்சியையும் நடித்து முடித்து உள்ளதாக கூறப்படுகிறது. அந்த சினிமா பிரபலம் வேறு யாரும் அல்ல நடிகர் வீரா தானாம். அவருடைய அனைத்து காட்சிகளும் எடுக்கப்பட்டு முடிந்தது கடைசியாக கூட நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து புகைப்படமும் எடுத்துக் கொண்டாராம். இதோ நீங்களே பாருங்கள்.