இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்த AK 61 படக்குழு..! கிளைமாக்ஸ் காட்சி எங்கு நடக்கிறது தெரியுமா.?

ajith-
ajith-

நடிகர் அஜித்குமார்  தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருகிறார் அண்மை காலமாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான் அந்த வரிசையில் இவர் கடைசியாக நடித்த வலிமை திரைப்படம் கூட 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை ஹச். வினோத்துடன் கைகோர்த்து தனது 61வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் அஜித். இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலைகளில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, இளம் நடிகர் வீரா, யோகி பாபு, அஜய், சஞ்சய் தத் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருவதாக கூறப்படுகிறது.  மேலும் ஏகே 61 திரைப்படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரி மையமாக வைத்து உருவாக்குவதால் இந்த படத்தில் ஆக்ஷன்  அதிகம் இருக்கும் என தெரிய வருகிறது.

இந்த படத்தில் அஜித் பைக் ரேஸ் காட்சிகளில் பின்னி படலெடுத்து உள்ளார் என சொல்லப்படுகிறது.  மேலும் AK 61 படத்தில் அஜித் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக படக்குழு போஸ்ட் ப்ரோமோஷன்  வேலைகளை நோக்கி நகரும் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இறுதி கட்டப்பட பிடிப்பு எங்கு நடக்கிறது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்வையில் ஆந்திராவில் உள்ள  araku valley இன்னும் மலையில் அஜித்தின் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது முடிந்தவுடன் அடுத்ததாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ஆகியவை வெளியிடாத வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.