நடிகர் அஜித்குமார் அண்மைகாலமாக நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கின்றன அந்த வகையில் விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அஜித்தின் வலிமை திரைப்படமும் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது.
வலிமை திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஹச். வினோத் உடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து தனது 66வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித் இதற்கான பூஜையை அண்மையில் போடப்பட்டது அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் சூட்டிங் எப்போது தொடங்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து.
இந்த நிலையில் தற்போது நல்ல செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது அஜித்தின் 61 வது திரைப் படத்தின் சூட்டிங் மொத்தம் 75 நாட்களாம் இதில் ஒரு சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட இருக்கிறது. அந்த சூட்டிங் 7லிருந்து 10 நாள் எடுப்பார்கள் என கூறப்படுகிறது.
மீதி சூட்டிங் எல்லாமே ஹைதராபாத் தேதி நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. படக்குழு இப்போ சென்னையிலிருந்து 9ம் தேதி ஹைதராபாத் புறப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி அஜித்தின் 61 வது படத்தின் சூட்டிங் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன முதல்கட்ட படப்பிடிப்பு 30 நாட்கள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை இந்த வருடமேஅஜித் அதிகம் முனைப்பு காட்டுவார் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன அதோடு மட்டுமல்லாமல் அஜித் இந்த திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.