தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார் இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கி வருகின்றது.
இதுவரை வலிமை திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் ஒருபக்கம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் நடிகர் அஜித் மூன்றாவது முறையாக ஹச். வினோத்துடன் இணைந்து தனது 61 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தையும் மிக பிரமாண்ட பொருட்செலவில் போனிகபூர் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. AK 61 படத்தின் கதைப்படி அஜித் நெகடிவ் ரோலில் நடிக்க இருப்பதால் அஜித் குமார் அதிரடியாக தனது உடல் எடையை குறைத்திருக்கிறார். இதனால் படம் வேற லெவலில் இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இந்த படத்தின் பூஜையை கோலாகலமாக போடப்பட்டு மிக விரைவிலேயே படம் தொடங்குகிறது இருப்பதாக தகவல்கள் தெரிவித்த நிலையில் ஒரு வழியாக அதற்கான தேதியை தற்போது கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் வருகின்ற மார்ச் 19ஆம் தேதி இந்த படத்தின் சூட்டிங் கோலாகலமாக தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
படத்திற்கான வேலைகள் மும்முரமாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. அங்குபிரமாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அஜித் மற்றும் படக்குழு கணிப்பின்படி இந்த வருடத்துக்குள் AK 61 திரைப்படத்தை எடுத்து முடித்துவிட்டு தீபாவளிக்கு கொண்டு வர அதிக முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதும் தெரியவில்லை.