AK 61 : படத்தில் அஜித்துடன் இணையப் போகும் பிக்பாஸ் பிரபலம் – யார் தெரியுமா.? அட இவர அஜித்தின் தீவிர ரசிகர் ஆச்சே..

valimai

தமிழ் சினிமா உலகில் ஒரு நடிகர் தொடர்ந்து பல்வேறு வெற்றி தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் ரசிகர்கள் அவரை துவண்டு விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்றால் அந்த பெருமை அஜித்தையே சாரும்.

ஆம் நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை விட அதிக தோல்வி படங்களை கொடுத்தவர் தான் இருப்பினும் அவரது நேர்மையான நடத்தை மற்றும் சினிமாவில் அவர் நடந்து கொள்ளும் நடத்தை ஆகியவை ரசிகர்களுக்கு பிடித்துப் போய் உள்ளதால் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர் அதை நன்கு உணர்ந்து கொண்ட  அஜித்.

தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்த வருடத்துக்கு ஒரு தடவையாவது  ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அப்படி அண்மைகாலமாக இவர் நடித்த திரைப்படங்களான  விசுவாசம், நேர்கொண்டபார்வை  ஆகிய படங்கள் நல்லதொரு வெற்றியை பெற்ற நிலையில் இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வழியாக பிப்ரவரி 24 ஆம் தேதி அஜித்தின் வலிமை படமும் வெளிவந்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது.

படம் வெளிவந்த நாளில் இருந்து இப்பொழுது வரையிலும் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் மட்டும் எந்த குறைபாடும் இல்லாமல் அடித்து நொறுக்கி வருகிறது சொல்லப்போனால் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. வலிமை திரைப்படம் மூன்று நாட்களில் மட்டுமே சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் தனது 61வது திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.

இதற்கான பூஜை போடப்பட்டு தற்பொழுது செட் அமைக்கப்பட்டு வருகிறது இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் வினோத் மூன்றாவது முறையாக கைகோர்த்து இந்த படத்தை எடுக்க உள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் 61வது திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் கலந்துகொண்டு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது அந்த பிரபலம் வேறுயாருமல்ல கவின் தான்.

kavin
kavin

தமிழ் சினிமாவில் ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த ஓடிக்கொண்டிருந்த கவின் கடைசியாக லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஒருவழியாக தற்போது டாப் நடிகரான அஜித்துடன் கை கோர்த்துள்ளார் அவரது மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டும் என தெரியவருகிறது மேலும் AK 66 படத்தில் கவின் ஒரு முக்கியமான ரோல் ஒன்றில் நடிப்பதாக கூறப்படுகிறது.