இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தில் முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் துணிவு திரைப்படத்திலிருந்து வெளியான ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க நடிகர் அஜித்தின் லூக்கை பார்த்து பலரும் வியப்பில் இருக்கிறார்கள் அந்த அளவிற்கு ஒரு மிரட்டலான லுக்கில் நடித்துள்ளார் நடிகர் அஜித். துணிவு படத்தில் நடிகர் அஜித்குமார் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து தற்போது மீண்டும் ஹெச் வினோத் கூட்டணியில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் மங்காத்தா படத்திற்கு இருந்த அதே எதிர்பார்ப்பு குறையாமல் துணிவு படத்திற்கும் இருக்கிறது. இதனை தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா செய்யாதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இதனை தொடர்ந்து துணிவு திரைப்படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்கள் மட்டும் இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுடைய உற்சாகத்தை வீணடிக்கும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது துணிவு திரைப்படம் சவுதியில் வெளியிட ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சமீபத்தில் துணிவு திரைப்படத்தில் பல காட்சிகள் சென்சார் மூலம் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது துணிவு படத்தில் அதிக கெட்ட வார்த்தைகள் இருப்பதாகவும் அதிக வைலன்ஷ் இருப்பதால் துணிவு படத்தின் சில காட்சிகள் சென்சார் நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது இதனை தொடர்ந்து சவுதியில் துணிவு படம் ban செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
அது மட்டுமல்லாமல் இதனால் துணிவு படத்தின் வசூல் குறையும் எனவும் கூற படுகிறது. துணிவு படம் வெளியாவதற்கு இன்னும் குறுகிய காலம் மட்டும் இருப்பதால் எப்படி இதை சரிகட்ட போகிறார்கள் என்று ஒரே பதட்டமாகவே இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதை எப்படி படக்குழுவினர் சரிக்கட்ட போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.