ஹெச் வினோத் கூட்டணியில் அஜித்குமார் இணையும் மூன்றாவது திரைப்படம் தான் துணிவு இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை தொடர்ந்து துணிவு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா சில்லா என தொடங்கும் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் கொண்டாடும் பாடலாக அமைந்து உள்ளது.
இதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகளான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு திரைப்படத்தின் தமிழக வெளியீடு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் துணிவு படத்தின் இயக்குனர் எச் வினோத் அவர்கள் ஊடகம் ஒன்றியத்திற்கு பேட்டி அளித்துள்ளார் அப்போது அவர் கூறியது என்னவென்றால் துணிவு திரைப்படம் ஒரு பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாக வந்த தகவல் ஒரு பொய்யான தகவல்.இதை யாரும் உண்மை என்று நினைக்க வேண்டாம் அதுமட்டுமல்லாமல் ஒரு காட்ச்சிக்காக மட்டும்தான் பேங்க் போன்ற செட் அமைக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் துணிவு திரைப்படத்தில் வரும் காட்சிகளை மங்காத்தா திரைப்படத்திடும் ஒப்பிட வேண்டாம் அது வேற கதை இது வேற கதை விரைவில் டீசர் மற்றும் டிரைலரை வெளியிடுவோம் அதில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் துணிவு படம் எப்படிப்பட்ட ஒரு படம் என்று கூறியுள்ளார் எச் வினோத்.
மேலும் துணிவு படத்தை முழுமையாக அஜித் அவர்கள் பார்த்து விட்டார் படத்தைப் பார்த்ததும் எச் வினோத்தை பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் விரைவில் துணிவு திரைப்படத்திலிருந்து டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.