தமிழ் சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஹீரோக்கள் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து அசத்துகின்றனர். இதனால் ரசிகர்களும் அந்த படங்களை கொண்டாடுகின்றனர் ஆனால் அண்மைகாலமாக டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும்படி மிகப்பெரிய வெற்றியை ருசிக்கவில்லை.
அண்மையில் வெளிவந்த படங்களிலேயே உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் தான் நல்ல வசூலை அள்ளியுள்ளது அந்த படம் மட்டும் தற்போது வரை சுமார் 350 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால் அண்மையில் வெளிவந்த ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை போன்ற படங்கள் சொல்லிக்கொள்ளும்படி நல்ல வசூல் வேட்டை நடத்தவில்லை இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு ஏமாற்றத்தை அளித்துள்ளது. வலிமை, பீஸ்ட் இந்த வருடம் வெளிவந்து மிக மோசமான விமர்சனத்தை பெற்று வசூலில் 200 கோடி செய்திருந்தது.
இருப்பினும் அஜித் விஜய் லெவலுக்கு இது கம்பி எனக்கூறி ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கமெண்ட்களை அதிகம் தெரிவித்தனர். மேலும் அஜித்தின் வலிமை விஜயின் பீஸ்ட் ஆகிய படங்கள் வெற்றியா தோல்வியா என்பது ரசிகர்களுக்கு இதுவரை தெரியவே தெரியாது இப்படி இருக்கின்ற நிலையில் உண்மையான தகவல் கொடுத்துள்ளார் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார் வலிமை படம் விசுவாசம் படத்தை விட 10% தான் அதேபோல விஜயின் மாஸ்டர் படத்தை விட 10% பீஸ்ட் படம் கம்மி. அவ்வளவுதான் மாஸ்டர் விசுவாசம் படம் ஹிட் அதேபோல வலிமையும் பீஸ்ட் படமும் மோசமான படம் எல்லாம் கிடையாது ஓரளவு டீசண்டாக ஓடி உள்ளது என கூறினார்.