வசூலில் பீஸ்ட் படத்தை விட அஜித்தின் வலிமை தான் டாப் – உண்மையை உடைத்த வினியோஸ்திகர்..

valimai and beast
valimai and beast

தமிழ் சினிமாவில் இரு தூண்களாக பார்க்கப்படுவது ரஜினி மற்றும் கமல் அவர்களுக்கு அடுத்தபடியாக அஜித் மற்றும் விஜய் இருக்கின்றனர் இவர்கள் இருவரும் அண்மைக்காலமாக நடிக்கும் திரைப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் அஜித் வலிமை படத்தை தொடர்ந்து தனது 61 வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாம்.. அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில்  நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவருடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர் படம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.

அதேபோல விஜயும் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்துள்ளார் இந்த படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் மிகப் பெரிய ஒரு பணக்காரராக நடித்துள்ளார் அவருடன் சரத்குமார், பிரகாஷ்ராஜ், போன்ற நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறது.

இந்த படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகுவதால் ஒரே நாளில் அஜித், விஜய் படங்கள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித், விஜய் படங்கள் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் வலிமை, விஜயின் பீஸ்ட் ஆகிய இரண்டு திரைப்படங்களில்..

எந்த படம் வசூல் வேட்டை நடத்தியது என்பது குறித்து திருச்சி விநியோகிஸ்தாகர் ஸ்ரீதர் ஸ்ரீ சமீபத்திய பேட்டியில் உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. வலிமை படம் அதிக விலைக்கு வியாபாரமானது ஆனால் பீஸ்ட் படம் அப்படி இல்லை.. கலெக்ஷனில் பீஸ்ட் படத்தை விட வலிமை படத்தின் வசூல் சற்று அதிகம் என கூறினார்.