அஜித்தின் ட்ராக் மாறிவிட்டது.? அதனால் என்னை கூப்பிடுவதையும் நிறுத்திவிட்டார் – வருத்தத்துடன் கூறிய ரமேஷ் கண்ணா

ajith

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடிக்கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார் இவர் சமீப காலமாக சமூக அக்கறை கலந்த படங்களில் நடிக்கிறார் அந்த படங்களும் வெற்றியை ருசிகின்றன அதனால் தொடர்ந்து அந்த ட்ராக்கிலேயே ஓடிக் கொண்டிருக்கிறார் கடைசியாக இவர் நடித்த துணிவு திரைப்படம் சமூக அக்கறை கலந்த ஒரு நல்ல மெசேஜ் உள்ள படமாக இருந்ததால்..

ரசிகளையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடி 230 கோடிக்கு மேல் வசூல் செய்து அசத்தியது அதனை தொடர்ந்து இன்னொரு நல்ல படத்தை கொடுக்க மகிழ் திருமேனியுடன் கூட்டணி அமைத்து “விடாமுயற்சி” என்னும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் முதல் கட்ட ஷூட்டிங்கிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் தன்னுடன் பழகும் நடிகர்களுக்கு அதிக பட வாய்ப்புகளை கொடுப்பார் அந்த வகையில் ரமேஷ் கண்ணாவும் இவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர் கடைசியாக இருவரும் இணைந்து வீரம் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது அதன் பிறகு இருவரும் இணையவே இல்லை இந்த நிலையில் ரமேஷ் கண்ணா சமீபத்திய பேட்டி ஒன்றில் வீரம் படத்திற்கு பிறகு அஜித்துடன் இணைந்து ஏன் படம் பண்ணவில்லை  என்பது குறித்து பதில் அளித்துள்ளார் வீரம் திரைப்படத்திற்கு பிறகு அஜித் என்னை கூப்பிடவே இல்லை..

இப்பொழுது வரும் சினிமாக்களில் நகைச்சுவை நடிகர்களுக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை.. அதேபோல அஜித்தும் நகைச்சுவை இல்லாத திரைப்படங்கள் நடிக்க துவங்கியுள்ளார் அதனால் அவர் நடிக்கும் படங்களில் என்னை கூப்பிடுவதையும் நிறுத்திவிட்டார் என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் இந்த தகவல் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.