வாரிசு படத்தை ஓரம் தள்ளிய அஜித்தின் “துணிவு”.. இத்தனை திரையரங்குகள் வித்தியாசமா.?

thunivu-
thunivu-

கடந்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசுப் படங்கள் ரிலீஸ் ஆகின.. இரண்டு திரைப்படங்களுமே  வேறு கதைகளும் கொண்டது. விஜயின் வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்பங்களை திரையரங்கு பக்கம் இழுத்து நல்ல வரவேற்பு பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.

அதேசமயம் அஜித்தின் துணிவு திரைப்படம் பக்கா ஆக்சன்  திரைப்படமாக இருந்ததால் மக்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்து அமோக வெற்றி பெற்று வருகிறது இரண்டு திரைப்படங்களும் இரண்டு வாரம் முடிவில் 100 கோடி மேல் வசூல் அள்ளியது. இந்த நிலையில் இரண்டு படங்களும் 25 நாட்கள் கடந்து உள்ளது. தற்போது எந்த திரைப்படம் வசூலில் அதிகம்..

எந்த திரைப்படம் அதிக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறித்து தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கிறது. வசூல் ரீதியாக இரண்டு திரைப்படங்களும் சின்ன அளவு வித்தியாசம் தான் இருக்கிறது.  25 நாட்கள் கடந்த பிறகு எந்த திரைப்படம் அதிக திரையரங்குகளில்  ஓடுகிறது என்பது குறித்து பார்க்க இருக்கிறோம்..

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் இப்போ தமிழகத்தில் மட்டும் 149 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறார் ஆனால் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 234 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது.

வாரிசை காட்டிலும் 85 திரையரங்குகள் அதிகமாக கைப்பற்றி துணிவு படம் ஓடிக்கொண்டிருக்கிறது இதை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது ரியல் வின்னர் துணிவு தான்..  நிச்சயம் துணிவு திரைப்படம்  50 நாள் மற்றும் 100 நாட்களை தொட்டு புதிய சாதனை படைக்கும் எனவும் அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.